ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து சில பான்-இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்', சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 1', ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
'ராதே ஷ்யாம்' படம் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவித்துவிட்டார்கள். இன்று 'புஷ்பா 1' படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் பாகத்தை 2022 அல்லது 2023ம் ஆண்டு வெளியிட உள்ளார்கள்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'புஷ்பா 1' படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்துபவராக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகர் பகத் பாசில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.