Advertisement

சிறப்புச்செய்திகள்

அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்றும்... இன்றும்... என்றும்... நீங்கா நினைவுகளில் சில்க் ஸ்மிதா!

23 செப், 2021 - 01:52 IST
எழுத்தின் அளவு:
Remembering-actress-Silk-Smitha

உறவினர் வீட்டு வேலைக்காரியாக தனது சென்னை வாழ்க்கையை தொடங்கி, சினிமாவுக்குள் நுழைந்து பல கோடி நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா. ஆந்திராவிலுள்ள ஏலூரு என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். ஏழ்மையின் காரணத்தால் இவருடைய பள்ளிக் கல்வி நான்காம் வகுப்போடு நின்று விட, குடும்பத்தினர் இவருக்கு சிறுவயதிலேயே திருமணமும் முடித்து வைத்தனர். திருமண வாழ்க்கையும் இவருக்கு பெரிதாக மகிழ்ச்சியை தரவில்லை. வேலை தேடி சென்னைக்கு வந்த இவர் திரைப்படத் துறையில் ஒப்பனையாளராக தனது முதல் பணியை ஆரம்பித்தார்.

மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தியின் உதவியால் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "வண்டிச்சக்கரம்" என்ற திரைப்படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். ஏற்று நடித்த முதல் கதாபாத்திரமே இவருக்கு பெரும் வரவேற்ப்பை பெற்று தந்தது. அதிலிருந்து விஜயலட்சுமி என்ற இவரது இயற்பெயர் சில்க் ஸ்மிதா என மாறியது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும்; கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே அமைந்தது. இவருடைய கவர்ச்சியான தோற்றம், நடன அசைவு, கிரங்க வைக்கும் கண்கள் தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் கனவுக்கன்னியாக வலம் வரச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 450க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்தவர் சில்க். சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையில் நிறைய துன்பங்களும், ஏமாற்றமும் மட்டுமே அதிகம் இருந்தது. 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு இறந்து போனார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் திரை வாழ்க்கையை சினிமாவாக எடுத்து பலர் கல்லாக்கட்டினர். அவர் மறைந்து இப்போது வரை 25 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் அவருக்கான இடம் மட்டும் சினிமாவில் இப்போதும் வெற்றிடம் தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய்?விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய ... உடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம் உடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in