சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில பெரிய படங்களின் வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்துடன் போட்டியிடப் போவதாக தெரிகிறது. ஆனால் தற்போதை தகவல்படி 'பீஸ்ட்' படம் அந்த சமயம் வெளியாகாது என்கிறார்கள்.
ஆனால் விஜய், அஜித் ரசிகர்களும் அதற்குள்ளாகவே சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் வரை நடைபெறலாம் என கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் டிசம்பர் மாதத்தில் மட்டும் அதன் இறுதிக்கட்டப் பணிகளை முடிப்பதென்பது மிகவும் சிரமமான விஷயம்.
எனவே, கோடை விடுமுறையில் தான் 'பீஸ்ட்' படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் கடைசியாக 2014 பொங்கலுக்கு வெளியாகி மோதிக் கொண்டன. அதன் பிறகு இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகவில்லை. 8 வருடங்களுக்குப் பிறகு 2022 பொங்கலில் மீண்டும் மோதிக் கொள்ள வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.
'பீஸ்ட்' படப்பிடிப்பு முடிந்த பிறகே அப்படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.