என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நெல்சன் இயக்கும் பீஸ்ட் என்ற தனது 65ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படம் அடுத்த ஆண்டு பொங்லுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66ஆவது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் அப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அந்தவகையில் விஜய்யின் 66வது படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
விஜய்யின் 66ஆவது படம் குறித்து வம்சி பைடிபள்ளி அளித்த ஒரு பேட்டியில், ‛‛விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். அப்போது அனைவரும் தெரிந்து கொள்வீர்கள்'' என தெரிவித்துள்ளார்.
நமக்கு கிடைத்த தகவல்படி இந்தபடத்தின் பூஜை அக்டோபர் 14-ந்தேதி ஆயுத பூஜை அன்று ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக விஜய் ஒரு படத்தை முடித்த பிறகே தனது அடுத்த படத்தை துவங்குவார். அந்த வகையில் பீஸ்ட் படப்பிடிப்பு அக்டோபர் 14க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.