அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஜினி டப்பிங் பேசிவிட்டார், தற்போது மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங் பேசி வரும் நிலையில் அண்ணாத்த படத்தின் அடுத்தடுத்து அப்டேட்களை ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படநிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், வருகிற செப்டம்பர் 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அண்ணாத்த பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ஒரு செய்தியை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.