வழக்கை வாபஸ் பெறுகிறதா 'ஜனநாயகன்' குழு | லாக் டவுன் கதை இதுவா? | தீபிகா படுகோனே எனது லக்கி நடிகை: காரணம் சொல்கிறார் அட்லி! | 'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா? | தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள் | சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன் | 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் | திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை | பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி |

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுமருத்துவமனையில்அனுமிக்கப்பட்டார் ரஜினி. அதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பினார்.
அதையடுத்து ராணா படம் தொடங்கப்படவில்லை. இதனால் ரஜினியுடன் முதன்முதலாக தீபிகா படுகோனே ஜோடி சேர இருந்தது தடைபட்டது. இருப்பினும் அதையடுத்து செளந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் என்ற அனிமேசன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே.
இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கப்போவதாக தற்போது ஒரு புதிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




