மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மறைந்த நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்த அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்றது அவரது லட்சியமாக இருந்தது. தற்போது விவேக் மறைந்து விட்ட நிலையில் காமெடி நடிகர் தாமு, கலாம் விவேக் என்ற அமைப்பை தொடங்கி இருப்பதாகவும், இது விவேக்கின் கிரீன் கலாம் அமைப்புக்கு போட்டியானது என்றும் தகவல்கள் வெளியானது.
இதுறித்து தாமு கூறியிருப்பதாவது: விவேக்கின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விவேக் பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து வந்த மரம் நடும் பணியை பலரும் செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதுவே விவேக்கின் வெற்றிதான்.
விவேக் பல்லாண்டுகளாக எனக்கு நண்பர். அவர் தொடங்கியிருக்கும் அமைப்புக்கு எதிராக நான் கலாம் விவேக் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நான் அப்படி சொல்லவில்லை. நான் போகும் இடங்களில் நடும் மரக்கன்றுகளுக்கு கலாம் விவேக் என்று பெயர் வைக்கப் போவதாகத்தான் சொன்னேன். அமைப்பு தொடங்கப்போவதாக சொல்லவில்லை.
விவேக் தொடங்கியிருக்கும் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் என்னை அழைத்தால் நான் கலந்து கொள்வேன். எனது நண்பனின் அமைப்புக்கு ஆதரவாக இருப்பேன். என்கிறார் தாமு.