இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் |

மறைந்த நகைச்சவை நடிகர் விவேக் அவருடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடித்ததில்லை. அவருடைய அந்த ஆசை நிறைவேறியும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சிக்கலில் நிற்கிறது. இயக்குனர் ஷங்கருக்கும் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கம் இடையே மோதல் உருவாகி நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றுவிட்டது.
இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜுலை முதல் அக்டோபர் வரை நேரம் இருக்கிறது, அப்போது படத்தை முடித்துக் கொடுக்க முயற்சிக்கிறேன் என ஷங்கர் பதிலளித்துள்ளார். அதோடு, படத்தில் விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
விவேக் நடித்த காட்சிகள் முழுமையாகப் படமாகவில்லை என்பது இதனால் தெரிய வருகிறது. அதன் காரணமாக அவர் நடித்த காட்சிகளை வேறொரு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க உள்ளதாகவும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கமல்ஹாசனுடன் நடிக்காமல் இருந்த அவரது ஆசை இந்தியன் 2 படம் மூலம் ஓரளவிற்கே நிறைவேறியுள்ளது. இப்போது அது படத்தில் இடம் பெற முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் அதன் படப்பிடிப்பு மீண்டும் நடந்திருந்தால் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கும்.
தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக ஒரு வருடமாக படப்பிடிப்பும் நடக்காமல் போனதால் விவேக்கின் ஆசை நிராசையாகவே முடியப் போகிறது என்பது வருத்தமே.