நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
2019ல் மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் லூசிபர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். மோகன்ராஜா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் மலையாள பதிப்பில் மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா கமிட்டாகியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாகவும். அவருக்கு பதில் திரிஷா நடிப்பதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் விசாரித்தால் இந்த செய்தி எதுவுமே உண்மையல்ல. தற்போது சிரஞ்சீவி ஆச்சார்யா பட வேலைகளில் உள்ளார். அதன்பிறகே இந்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என்கின்றனர். அதேசமயம் ஏற்கனவே சிரஞ்சீவியின் சைரா படத்தில் முதன்மை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அதேப்போன்று இதிலும் நிச்சயம் நடிப்பார் என்கிறார்கள்.