‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்தியா சினிமாவிலேயே மோஸ்ட் வான்டட் ஸ்டண்ட் இயக்குனர்களில் ஸ்டண்ட் சில்வா முக்கியமானவர்.. கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர், தான் பணிபுரியும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான அதே சமயம் அதிரடியான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி கொடுப்பவர். அப்படிப்பட்டவர் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.
சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக ஆக்சன் படம் ஒன்றைத்தான் இவர் இயக்க இருக்கிறாராம்.. என்றாலும் சாந்தமான படங்களை இயக்கிவரும் இயக்குனர் விஜய் தான் இந்தப்படத்திற்கான திரைக்கதையை எழுத இருக்கிறார் என்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம். இதில் ஹீரோவாக ஒரு முன்னணி நடிகர் தான் நடிக்க இருக்கிறார் என்றும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.