ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் |
சினிமா பிரபலங்கள் பலரும் யூ டியூப் சேனல் துவங்கி வருகின்றனர். இயக்குனர் கே.பாக்யராஜும் கே.பி.ஆர் சோவ்ஸ் என்ற பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கி உள்ளார். நேற்று தனது 70வது பிறந்த நாளை முன்னிட்டு இதனை அறிவித்தார். யூ டியூப் சேனலுக்கான தொழில்நுட்ப உதவிகளை லயோலா கல்லூரி விஷ்காம் மாணவர்கள் வழங்குகிறார்கள். மேலும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளத்திலும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பாக்யராஜ் கூறியிருப்பதாவது: சினிமாவை கண்டுபிடித்த லூமியர்ஸ் பிரதர் முதல் என்னை உங்கள் முன் நிற்க வைத்து என் குருநாதர் பாரதிஜாரா, என்னை வளர்ந்த ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய திரை, சின்னத்திரை எல்லாவற்றையும் கடந்து இப்போது மிகச் சின்ன திரைக்கு வந்திருக்கிறேன்.
யூ டியூப்பில் பேசுவதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் இருந்தாலும் இப்போது பத்து முதல் 12 நிமிடத்திற்குள் வீடியோவை முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதை செய்வேன். எல்லா காலத்திலும் என்னை ஆதரித்த ரசிகர்கள் இதிலும் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். என்கிறார் பாக்யராஜ்.