பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

லெஜண்ட் படத்திற்கு பிறகு தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லீடர்' எனும் படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, அமிர்தா ஜயர், ஷியாம், சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் முதலில் ஏப்ரல் 3ந் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்ததால் இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக சென்னை டிரேட் சென்ட்ரில் மார்ச் 21ம் தேதியன்று நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் லீடர் படம் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளதால் சற்று தள்ளி ஏப்ரல் 3ம் தேதியன்று இசை வெளியீட்டு விழாவை நடத்துகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.