பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கூகுள் குட்டப்பா, கார்டியன் ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் அடுத்து 'பத்து நாள் ராஜா' என்ற படத்தை இயக்குகிறார். இதில் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா என்பவர் நடிக்கிறார். மேலும் சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சதீஷ் மற்றும் கதாநாயகி சம்மந்தப்பட்ட காட்சிகளுடன் தொடங்கியுள்ளனர். இந்த படத்திற்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவரது ஒளிப்பதிவில் நடிப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக சதீஷ் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.