ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி |

நடிகர் விஜய்சேதுபதி இன்று 48வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு புரிஜெகன்நாத் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள அந்த படத்துக்கு ஸ்லாம்டாக் - 33 டெம்பிள் ரோடு என்பது தலைப்பு. படத்தின் போஸ்டரை பார்க்கும்போது இது பக்கா ஆக் ஷன் படம் என தெரிகிறது. வரிசையாக தோல்விகளை சந்தித்து வரும் பிரபல தெலுங்கு இயக்குனரான புரி ஜெகன்நாத் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். நடிகை சார்மியுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த செய்தியும் இல்லை.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த, ட்ரைன் படம் சம்மருக்கு அல்லது அதற்கு முன்பு ரிலீஸ் ஆக வாய்ப்பு. அடுத்து இந்த படம் வெளியாகும். இந்த படங்கள் தவிர, காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப்சீரியலில் நடித்துள்ளார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனின் நடித்து வருகிறார்.
தலைவன் தலைவிக்குபின் மீண்டும் பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படியாக அவர் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. எப்போது ரிலீஸ் ஆகும் என அவருக்கே தெரியாது என்ற நிலை நிலவுகிறதாம். அவர் முன்பு நடித்த காந்தி டாக்ஸ் மட்டும் ஜனவரி 30ல் ரிலீஸாகிறது.