என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மே 1ம் தேதியான நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியாகின. தமிழில் 'ரெட்ரோ', தெலுங்கில் 'ஹிட் 3', ஹிந்தியில் 'ரெய்டு 2' ஆகிய அந்தப் படங்களுக்குள் ஆங்கிலப் பெயர் தலைப்பு என்பது ஒரு ஒற்றுமையாக இருந்தது. ஆனால், முதல் நாள் வசூலில் அந்த ஒற்றுமை இருக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
மேற்கண்ட படங்களில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளிவந்துள்ள 'ஹிட் 3' படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் உலக அளவில் 43 கோடி வசூலித்துள்ளது. நேற்றைய வெளியீடுகளில் இந்தப் படத்தின் வசூல்தான் இந்தியப் படங்களில் மிக அதிகம் என்றும் 'பெருமை'பட்டுக் கொண்டுள்ளார்கள். அதனால், 'ரெட்ரோ, ரெய்டு 2' படங்களின் வசூல் அதைவிடக் குறைவானதே என்பதுதான் அதன் அர்த்தம்.
நானி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'தசரா' படம் முதல் நாளில் 38 கோடி வசூலித்தது அவரது படங்களின் சாதனையாக இருந்தது. அதை 'ஹிட் 3' படம் முறியடித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.