சச்சினுடன் விரலால் கிரிக்கெட் விளையாடிய அமிதாப் பச்சன் | அந்த வாத்தியார் போலவே இந்த வாத்தியாரும்... : கிர்த்தி ஷெட்டி | சினிமா நாயகன் ஆனார் டிவி நடிகர் பிரணவ் மோகனன் | திரிஷாவுக்கு என்னாச்சு? எதுவும் பேசுவது இல்லையே... | 'திரெளபதி 2' படத்துக்காக எடை கூடினேன்: ரக்ஷனா இந்துசூடன் | தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா | பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர் | பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர் | நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை |

பாலிவுட்டின் சீனியர் ஹீரோவான அமிதாப்பச்சன் இந்த 2024 - 25 நிதியாண்டில் சுமார் 350 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளாராம். அதற்கான வரியாக 120 ரூபாய் வரை கட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கடைசி கட்டமாக 52 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தியுள்ளார்.
சினிமாவில் நடிப்பது, விளம்பரங்களில் நடிப்பது, டிவி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என அவரது வருமானம் இருந்து வருகிறது. முன்பெல்லாம் இந்திய சினிமா நடிகர்கள் வருமான வரியை வருடா வருடம் கட்டாமல் பாக்கி வைப்பது வழக்கம்.
நிதியாண்டு முடிந்த பின் அதை வருமான வரித் துறை ஒரு பெரிய பட்டியலாகவே வெளியிடும். ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைத்து நடிகர்களும் வருமான வரியை ஒழுங்காகவே கட்டிவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பாக்கி வைக்கிறார்கள் எனத் தகவல்.
இந்திய அளவில் இந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பதாகத் தகவல். அவருக்கு அடுத்து விஜய், ஷாரூக்கான், ரஜினிகாந்த், ஆமீர்கான், பிரபாஸ், அஜித், சல்மான்கான், கமல்ஹாசன் ஆகியோர் உள்ளனர்.