என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலம் கூர்க்-கைச் சொந்த ஊராகக் கொண்டவர். கன்னட சினிமாவில் நடித்து பின் தெலுங்கில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படமான 'சசாவா' நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்மிகா பேசும் போது தன்னை ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னட மக்களை கோபப்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும் தனது பூர்வீகத்தை ரஷ்மிகா மறக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார் ரஷ்மிகா. அதனால்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் என்றும் சிலர் ரஷ்மிகாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடிக்க ரஷ்மிகா ஆர்வம் செலுத்தி வருவதும் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.