Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி

14 ஜன, 2025 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Enough-of-us-saying-live!-When-are-you-going-to-live...-Ajiths-interview-in-Dubai


கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நடிகர் அஜித்குமார், துபாயில் நடைபெற்ற '24எச்' சீரிஸ் கார் ரேஸில் அவரின் 'அஜித்குமார் ரேஸிங்' அணியின் உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் பங்கேற்றார். இடையில் ஓட்டுநராக விலகுவதாக அறிவித்ததுடன், அணியை வழிநடத்தினார். ரேஸின் முடிவில், 992 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து அஜித் அணி சாதனைப் படைத்தது.

வெற்றிப்பெற்றதும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி ரசிகர்களை நோக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஜித்குமாருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் துபாயிலுள்ள 'கல்ப் நியூஸ்' ஊடகத்திற்கு அஜித் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். அதிகமாக பயணம் செய்வதை நான் எப்போதும் விரும்புவேன். இந்த விஷயங்களெல்லாம் என்னை ஊக்குவிக்கும். என்னுடைய வேலையை புத்துணர்ச்சியுடன் தொடர்வதற்கு இவையெல்லாம் ரீசார்ஜ் செய்யும். நான் என்னுடைய குழந்தைகளிடம் கல்வியை கற்கச் சொல்வேன். தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளக் கூறுவேன். பயணம் செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் மற்றும் விளையாட்டுகளிலும் நாம் ஈடுபட வேண்டும். பயணம் செய்யும்போது வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்க முடியும்.

வெற்றி, தோல்வி

பயணம் செய்யும்போது நீங்கள் எவ்வளவு சிறியவர்கள், இந்த உலகம் எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குப் புலப்படும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது வெற்றியையும் தோல்வியையும் கருணையுடன் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். இதனால்தான் பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது. வெற்றியைவிட தோல்வியே உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். தோல்வி ஒவ்வொரு முடிவையும் எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டும் என்பதை சொல்லித்தரும்.

ரீடேக்

நடிக்கும்போது சொதப்பினால் ரீடேக் எடுத்துக் கொள்ளலாம். டென்னிஸ் விளையாடும்போது சர்வீஸில் சொதப்பினால் மீண்டும் முயற்சி செய்யலாம். ஆனால், ரேஸிங் பொறுத்தவரையில் இந்த ரீ டேக் கிடையாது. எந்த துறையாக இருந்தாலும் உங்களை சுற்றி நல்ல மனிதர்கள் இருக்க வேண்டும். நீங்கள் எதை தேர்ந்தெடுத்து செய்கிறீர்களோ அதை திறம்பட செய்யுங்கள் என்று நான் கூறுவேன். வெற்றிக்கு எப்போதும் உங்களின் குடும்பத்தின் உறுதுணை மிகவும் முக்கியமானது. என்னுடைய மனைவி ஷாலினி மற்றும் என்னுடைய குழந்தைகளின் உறுதுணையில்லாமல் என்னால் இந்த விஷயத்தை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தை அடைய நினைக்கும்போது உங்களின் ஆர்வத்தை உங்களின் குடும்பத்தாரிடம் தெரியப்படுத்துங்கள். அவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மென்டல் ஹெல்த்

இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியிருக்கிறது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன். 'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய வாழ்க்கை என்பதுதான் இதற்கு அர்த்தம்.

அஜித் வாழ்க

உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களே.... படத்தை பாருங்கள். 'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? நான் உங்களுடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையை கவனியுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம்துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் ... நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜன, 2025 - 05:01 Report Abuse
BalaG தெளிவாக பேசுகிறார். நல்லது. ஆனால் இதே மாதிரி பேச்சையும் அறிவுரைகளையும் இவருடைய ரசிகர்கள் எல்லை மீறும் போதும், பைத்தியக்காரத்தனமா விழுந்து சாகும் போதும் கடுமையாக தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்
Rate this:
BHARATH - TRICHY,இந்தியா
14 ஜன, 2025 - 02:01 Report Abuse
BHARATH ஆக்குத்து, ஈகுத்து, ஜோசஃபுக்கு ஊமை குத்து.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in