படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ள படம் ' வீர தீர சூரன் 2' . இதில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், சித்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் குறித்து அருண்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, " வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்வு இது மூன்றையும் உணர்த்தும் படமாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. இந்த கதை எடுத்தவுடன் ஆரம்பம் ஆகிவிடும் ஒரு ஊர்ல - னு கதை சொல்லி தான் பழகியிருக்கேன். ஆனால் இதில் அப்படியில்லை எடுத்தவுடன் கதை ஆரம்பம் ஆகிவிடும். அதன்பிறகு தான் எந்த ஊர்ல யார் என்பது தெரிய வரும். இதெல்லாம் கொஞ்சம் சவாலாக இருந்தது. வீர தீர சூரன் பாகம் 1 கண்டிப்பாக வரும். ஆனால் அதற்கு கால அவகாசம் ஆகும்" என தெரிவித்துள்ளார்.