அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்களின் விமர்சனங்கள் எல்லை மீறி செல்வதாக திரையுலகில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் வெளிவந்த 'கங்குவா' படம் தியேட்டர்களில் ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் விமர்சனங்களாலும் அதன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று திரையுலகில் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யு டியூப் சேனல்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும், விமர்சனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதே கருத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சவுந்தர் முன்னிலையில் இன்று(டிச., 3) விசாரணைக்கு வந்தது. விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, திரைப்படங்கள் வெளியான, 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறினார். மேலும் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.




