ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார். இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகின. இறுதியாக சந்தீப் கிஷன் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று(நவ., 29) அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக மோசன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் இந்த படம் நகரும். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ் குமரன்.