கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா 2'. இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்து அதற்காக தேசிய விருதையும் வென்றார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். முதல் பாகத்தின் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. அதற்கான பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். இரண்டாம் பாகத்திற்கும் அவர்தான் இசையமைத்து வந்தார். படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இன்னும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.
இந்நிலையில் இப்படத்திற்கான பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. தமன் மற்றும் 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் அமைக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்த பின்னணி இசை, படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்குப் பிடிக்கவில்லையாம். அதனால், இரண்டாவது வெர்ஷனாக தமன் அமைத்துத் தர உள்ள பின்னணி இசையை வைத்து யாருடைய பின்னணி இசையை படத்தில் வைக்கலாம் என முடிவு செய்யப் போகிறார்களாம். அஜனீஷ் லோக்நாத் சில முக்கிய காட்சிகளுக்கு பின்னணி இசை அமைப்பாராம்.
படத்தில் மூன்று பேருடைய பின்னணி இசையும் வருமா அல்லது தமன், அஜனீஷ் பின்னணி இசை மட்டும் வருமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.
இப்படியான தகவல் டோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும்.