சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் | போலியான சோசியல் மீடியா கணக்குகள் ; சரத்குமார் பட நடிகை எச்சரிக்கை |

சார்பட்டா நடிகையை வைத்து, சுள்ளான் இயக்கிய படம் மட்டுமின்றி, உச்ச நடிகர் நடித்த படத்திலும், பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகளில் நடிக்க வைத்தனர். தற்போது அதுபோன்ற கேரக்டர்களுடன் மேலும் சில இயக்குனர்களும் அவரிடத்தில் கதை சொல்லி வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகை, 'இரண்டு படத்தில் கற்பழிப்பு சீனில் நடித்ததால், தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு மட்டும் தான் நான் செட்டாவேன் என்று முடிவு செய்து விடாதீர்கள்...' என்று அந்த படங்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
'விட்டால் என்னை முழுநேர பாலியல் காட்சி நடிகை என்ற முத்திரையை குத்தி விடுவர். இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளில் நடிப்பதில்லை என, முடிவெடுத்துள்ளேன்...' என, கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார், சார்பட்டா நடிகை.