ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் அவர் அஜித் உடன் ஐந்தாவது முறையாக இணைவார் என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் சிவா, இதுவரை விஜய்யை வைத்து படம் இயக்காதது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் .
அவர் கூறுகையில், ஏற்கனவே விஜய்யை சில முறை சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவரும் என் இயக்கத்தில் நடிப்பதாகத்தான் சொன்னார். ஆனால் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அதனால் தான் இதுவரை அவரை வைத்து நான் படம் இயக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.