தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை வனிதா சர்ச்சைக்கு பேர் போனவர். குடும்ப பிரச்னை, மூன்று முறை திருமணம், பிக்பாஸ் என பல சர்ச்சைகளில் சிக்கினார். சர்ச்சைகளையே தனக்கு சாதமாக்கி தற்போது படங்களில் பிஸியாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் கடற்கரை ஒன்றில் நடன இயக்குனர் ராபர்ட்டிடம் வனிதா தனது காதலை புரொபோஸ் செய்வது போன்றும், அதில் ‛Save the Date', அக்., 5 என குறிப்பிட்டு ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. இதை வைத்து வனிதா நான்காவது திருமணம் செய்யபோவதாக செய்தி பரவுகிறது.
உண்மையில் இருவரும் ஒரு படத்தில் நடித்துள்ளனர். அதற்காக இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு படத்திற்கு விளம்பரத்தையும் கூடவே பரபரப்பையும் பற்ற வைத்தனர். இந்நிலையில் அக்., 5ம் தேதியான இன்று அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் வனிதா. அது அவர்கள் நடித்துள்ள ‛மிசஸ் அண்ட் மிஸ்டர்' படமாகும். அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதோடு இந்த படத்தை வனிதாவே இயக்கி, தனது மகள் ஜோவிகா பெயரில் தயாரிக்கவும் செய்துள்ளார்.