'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில், தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட சிலர் நடித்து வருகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் விடுதலை 2 திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த விடுதலை 2 படத்திற்காக படமாக்கப்பட்டுள்ள காட்சிகளின் ரன்னிங் டைம் 4 மணி நேரம் இருப்பதால் இரண்டாம் பாகத்திற்கு போக மீதம் உள்ள காட்சிகளை விடுதலை படத்தின் மூன்றாம் பாகமாக வெளியிடவும் வெற்றி மாறன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மூன்றாம் பாகத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் மேலும் சில காலம் படப்பிடிப்பு நடத்துவதற்கும் திட்டமிட்டு இருக்கும் வெற்றிமாறன், விடுதலை 3 படத்தை இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியிட முடிவு செய்துள்ளாராம்.