அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பயர் பாடல் வெளியிடப்பட்டது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கும் கங்குவா படத்தின் முதல் பாகம் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பத்து மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இன்று(ஆக., 12) இப்படத்தின் இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு டிரைலர் வெளியாகி இருக்கிறது. 2:37 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் பெருமாச்சி மண்ணை காக்க போராடுபவராக வித்தியாசமான வேடத்தில் சூர்யா உள்ளார். சூர்யா, பாபி தியோல் இடையேயான சண்டை தான் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. அவர்களின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. பிரம்மாண்டமான ஆக் ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. டிரைலர் வெளியான இரண்டு மணிநேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றன. தற்போது கங்குவா டிரைலர் வலைதளங்களில் டிரெண்ட்டாகி உள்ளது.