ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் ‛ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்தார். இது அல்லாமல் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இதனை அறிமுக இயக்குனர் இயக்குகிறார். யாலி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். மேலும், இந்த வெப் தொடரை சோனி லிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.