ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

காமெடி மற்றும் குணசித்ர நடிகராக இருந்த காளி வெங்கட் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் கதை நாயகனாக நடிக்கும் படம் 'தோனிமா'. இதனை 'பக்ரீத்' படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்குகிறார். காளி வெங்கட் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். பாலாவின் 'வணங்கான்' படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ரோஷிணி பிரகாஷ் தான் இவர். இதில் அவர் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். காளி வெங்கட், ரோஷிணி பிரகாஷ் தவிர விஷ்வ ராஜ், விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஜெகதீசன் சுப்பு கூறியதாவது: 'பக்ரீத்' படத்தில் ஒரு குடும்பம், ஒரு ஒட்டகம் சுற்றி நடக்கும் கதையை சொன்னேன். இதில் ஒரு குடும்பம், ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் கதையை சொல்கிறேன். விலங்குகள் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. அதனால்தான் விலங்கை மையப்படுத்தி உணர்வுபூர்வமான கதையை சொல்கிறேன்.
காளி வெங்கட், ரோஷிணி தம்பதியின் மகனாக விஷ்வ ராஜ் நடித்திருக்கிறார். மகனுக்கு காது ஆபேரஷன் செய்வதற்காக அல்லல்படும் அம்மாவாக ரோஷிணி நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைக்கிறது. அது பெண் நாய்க்குட்டி என்பதால் அதற்கு 'தோனிமா' என காளி வெங்கட் பெயர் வைக்கிறார். விலங்கு மீதான பாசத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் சொல்லும் படமாக இது இருக்கும் என்கிறார்.




