ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் பலரை தத்தெடுத்து தனது சொந்த செலவில் படிக்க வைத்து அவர்களை ஆளாக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாற்றம் என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன் மூலம் ஆரம்பத்தில் பத்து விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த உதவி செய்து வருகிறார். இதை பின்பற்றி பலரும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வம் என்கிற ரசிகர் ஒருவர் தீபாராதனை தட்டில் சூடம் ஏற்றி அதன் அடியில் தூரிகையை ஒட்டி வைத்து அதன் மூலம் சுவற்றில் லாரன்ஸ் படத்தை வரைந்து ஆச்சரிய படுத்தியுள்ளார். அதில் அவர் லாரன்ஸை மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்துவிட்டு அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ள லாரன்ஸ், “உங்களுடைய கடின உழைப்பையும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். அதேசமயம் ஒரு சின்ன வேண்டுகோள்.. நீங்கள் சொல்வது போல நான் ஒன்றும் மனித கடவுள் அல்ல.. நான் மக்களுக்காக சேவை செய்கின்ற கடவுளின் வெறும் சேவகன் மட்டுமே. நீங்கள் இவ்வளவு பெரிய வார்த்தைகளை பயன்படுத்தியது உங்கள் அன்பை காட்டுகிறது. உங்களுடைய ஆச்சரியப்பட வைக்கும் தனி திறமைகளுக்காக உங்களை நான் விரைவில் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.