'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவின் முக்கியமான நடிகை மஞ்சு பிள்ளை. பழம்பெரும் நடிகர் எஸ்.பி.பிள்ளையின் மகள். குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிநேகிதியே, மன்மதன் அன்பு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் முகுந்தன் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 2000மாவது ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார். சுஜித், கேரளா கபே, த்ரிஷ்யம், லூசிபர், மிஸ் இந்தியா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் 'பாபநாசம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ஜேம்ஸ் அண்ட் அலைஸ் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு பிள்ளையும், சுஜித்தும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதை சுஜித் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து விட்டோம். விவாகரத்து பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது அது நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து நாங்கள் நட்புடன் இருப்போம்'' என்றார்.