விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 26வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் டைட்டில் வா வாத்தியாரே என்று கூறப்பட்டாலும், இதுவரை படக்குழு அதை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் கார்த்தி 26வது படத்தின் டைட்டில் ‛வா வாத்தியாரே' என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், வா வாத்தியாரே படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.