ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் எனப் பெயர் பெற்ற விஜய் கூட அவரது கட்சிப் பெயரில் 'வெற்றி' என்பதை சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார். பெயரில் உள்ள வெற்றி 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கிடைக்குமா என்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியைப் பெற இந்த 2024ம் ஆண்டில் இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் கூட தவிக்க வேண்டியதாக இருக்கிறது. “மலையாளப் படங்கள் ஓடுதுங்கறாங்க, ஹிந்திப் படங்கள் ஓடுதுங்கறாங்க, தெலுங்குப் படங்கள் ஓடுதுங்கறாங்க, ஆனா, ஒரு தமிழ்ப் படம் கூட ஓடமாட்டேங்குதே,” என ஒட்டு மொத்த திரையுலகமே காத்திருக்கிறது.
இந்த காத்திருப்பு இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும். அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்து முடியும் வரை பெரிய படங்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவரையில் தியேட்டர்களை தாக்குப் பிடிக்க வைப்பது பெரும் சிரமம் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.