''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2023ம் ஆண்டில் வெளியான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை 'லியோ' படத்தால் 66 நாட்கள் கூட தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதற்குள் அந்த சாதனையை 'சலார்' படம் முறியடித்துவிட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்த 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடியே 50 லட்சம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஒரு இந்தியத் திரைப்படம் இந்த ஆண்டில் உலக அளவில் அதிக வசூலைக் குவித்துள்ளது என்று அதற்கு 'கேப்ஷன்' வைத்தார்கள்.
இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ள 'சலார்' படத்திற்கான முதல் நாள் போஸ்டரில், “2023ல் இந்தியாவில் மிகப் பெரும் ஓபனிங், 178 கோடியே 50 லட்சம், உலக அளவில்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
'லியோ' படத்திற்கு வட இந்திய மாநிலங்களில் பெரிய அளவில் வெளியாகவில்லை. அதற்கே அவ்வளவு வசூல் என்றார்கள். இப்போது 'சலார்' படத்திற்கும் வட இந்திய மாநிலங்களில் அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை, அப்படியிருந்தும் சாதனை வசூல் என்கிறார்கள்.
தயாரிப்பாளர்களே இந்த வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் அதை ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.