‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம் லைட் என்கிற பிரிவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இப்பட விழாவில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வரும் ஜன., 25 முதல் பிப்., 4 வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.




