ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகம் டிராப் ஆன பிறகு படம் எதுவும் இயக்காமல் இருந்த சிம்பு தேவன் அந்த படத்தை யோகி பாபுவை வைத்து முடிக்க முயற்சித்தார். ஆனால் அது இயலவில்லை. இதனால் அவரிடம் வாங்கிய கால்ஷீட்டை பயன்படுத்தி தற்போது 'போட்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் கவுரி கிஷன் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்தின் டீசர் வெளியீடு இன்று துபாயில் நடக்கிறது.
படத்தை பற்றி சில அப்பேட் வருமாறு: இந்த படம் ஒரு சர்வைவல் த்ரில்லர் வகை படம். 1940களில் ஜப்பான் சென்னையை குண்டுவீசித் தாக்கிய காலகட்டம். சென்னை மீது எம்டன் குண்டு வீசப்பட்ட நேரம்... அப்போது சென்னையை சேர்ந்த 10பேர் ஒரு சிறிய படகில் கடலுக்குள் தப்பிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக, படகு நடுக்கடலில் நிற்கிறது. படகில் ஓட்டை விழுந்து மூழ்க தொடங்குகிறது. ஒரு கொலைகார சுறா ஒன்று படகை சுற்றி சுற்றி வருகிறது. இந்த சிக்கலில் இருந்து அந்த 10 பேரின் தலைவரான யோகி பாபு மற்றவர்களை தனது புத்தி சாதுர்யத்தால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
நெல்லை மாவட்டம் குலசேகரபட்டின கடலில் 5 மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்தது. கடலின் நடுப்பகுதியில் ஒரு படகில் நடிகர்கள் நடிக்க சுற்றிலும் 7 படகுகளில் படப்பிடிப்பு குழுவினர் அமர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அலையின் எழுச்சி காரணமாக ஒரு வாரம் வரை படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை யோகி பாபு கடலில் தவறி விழுந்த சம்பவமும் நடந்திருக்கிறது.