இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் |
ரேடியோ மற்றும் சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய். தற்போது பிரமாண்ட சினிமா விழாக்களில் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். டான் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார். இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் கதை நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை மனம் கொத்திப் பறவை, ஜிப்சி, கழுவேர்த்தி மூர்க்கன், டாடா படங்களை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஹேமநாதன் என்ற புதுமுகம் இயக்குகிறார். டாடா படத்துக்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஹேமநாதன் கூறும்போது, “இது கணவன், மனைவி இடையிலான அன்பு, ஈகோ இரண்டையும் சொல்லும் கதை. கணவனாக ஆர்ஜே விஜய், மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்கள். கதைப்படி நாயகன் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனால் ஆர்.ஜே.விஜையை அந்த கேரக்டரிலேயே நடிக்க வைக்கிறோம். ஹீரோயின் பாடகி. அதனால் அத்தகைய முகவெட்டு, பாடிலாங்குவேஜ் தேவைப்பட்டதால் அஞ்சலி நாயரை நடிக்க வைக்கிறோம். இது பீல் குட் படமாக இருக்கும். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை” என்றார்.