ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் திரைக்கு வந்து 500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. 7 நாட்களில் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் லோகிவர்ஸ் 2.0 என்ற பெயரில் தீம் வீடியோவை லியோ படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் லியோ படத்தின் இறுதியில் ஒலிக்கப்பட்டது. மேலும் லோகிவர்ஸ் 2.0 எல்சியுவின் கீழ் உள்ள மூன்று படங்களின் கருப்பொருள்களின் கலவையாக இந்த பாடல் உருவாகி உள்ளது. அதாவது விஜய்யின் லியோ படம் மட்டுமின்றி கமலின் விக்ரம், கார்த்தியின் கைதி ஆகிய படங்களின் பின்னணி இசையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. எல்சியு வில் உள்ள நான்கு முக்கிய கதாபாத்திரங்களான டில்லி, விக்ரம், லியோ தாஸ் மற்றும் ரோலக்ஸ் ஆகியவை இந்த தீம்மில் இடம் பெற்றுள்ளன.