தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த் நடித்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாடா. பிறகு கதைப்படி ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் தேவையில்லை என்று, இப்படத்தில் அவர் நடித்திருந்த அனைத்துக் காட்சிகளையும் சுசீந்திரன் நீக்கினார். பின்னர் தெலுங்கில் பிசியான நடிகை ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தனுஷ் ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் நடித்தார்.
தற்போது அவர் 'சுல்தான் ஆப் டெல்லி' என்ற இந்தி வெப்தொடரில் நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடரில் மவுனி ராய், விநய் பதக் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் மெஹ்ரின் ஒரு பணக்கார குடும்பத்தின் தலைவனுக்கு ஆசை நாயகியாக நடித்துள்ளார். இதில் அவர் பாலியல் தொடர்பான படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இதுகுறித்து பலரும் மெஹ்ரினை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாமா என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு மெஹ்ரின் தனது சமூக வலைத்தளத்தில் அளித்துள்ள பதிலில், “திருமண பந்தத்தில் கணவனால் நடத்தப்படும் பாலியல் உறவு காட்சியில் நடித்திருக்கிறேன். பல பெண்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்னை இது. ஆனால், அதை 'ஆபாச காட்சி' என்று ஊடகங்கள் விவரிப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அந்த வார்த்தை தீவிரமான ஒன்றை சாதாரண விஷயமாக மாற்றி விடுகிறது. ஒரு நடிகையாக, அந்தக் கேரக்டருக்கு நியாயம் செய்வது என்னுடைய வேலை. எனவேதான் அந்தக் காட்சியில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.