ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சின்னத்திரை பிரபலமான நிஷா சீரியல்களில் நடித்ததுடன் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சினிமா நடிகரான கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷாவுக்கு சமைரா என்ற பெயரில் 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான அவருக்கு நேற்றைய தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது மனைவியுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், 'நான் நிறைய ரோல்களை செய்திருக்கிறேன். ஆனாலும், அப்பா என்கிற ரோலை எதனுடனும் ஒப்பிட முடியாது' என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தன் மகனின் விரல்களை பிடித்த படி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து கணேஷ் - நிஷா தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.