படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
விழுப்புரத்தில் தீவிர ரஜினி ஆதரவாளரான ஜெயராம் என்பவரின் அண்ணாமலை ஓட்டல் திறப்பு விழாவுக்கு, ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா கலந்து கொண்டார். அப்போது விழுப்புரத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை பழனிவேல் மற்றும் தாயார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சத்ய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தைச் சேர்ந்த நமது வீரமுத்துவேல் ஐஎஸ்ஆர்ஓ இயக்குனராக, குழுவாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றி சந்திராயனை நிலவில் இறக்கி சாதித்துள்ளார். அவரது வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறோம். அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ரஜினி லால் சலாம் படத்தில் நடிக்கிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ரஜினி இமயமலை செல்லும் போதும், ஆசிரமத்திற்குச் செல்லும் போதும் என பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் நண்பராக இருக்கிறார். அவர் யோகி, சன்னியாசி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் தவறு ஏதும் இல்லை. வரும் லோக்சபா தேர்தலில் ரஜினி சார்பில் யாருக்கும் ஆதரவும் இல்லை. இனிமேலும் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதுமில்லை என்றார்.