ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு |
நடிகர் அர்ஜூன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். இதனை தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.
கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க, அர்ஜூனும் இணைந்து நடிக்கிறார். கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் துவங்கியது.