
சண்டை இயக்குனரின் லாக்டவுன் டைரி
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படம் பற்றி ஜாலி பாஸ்டியன் கூறியதாவது: 900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம் இயக்கி இருக்கிறேன். 2வது படமாக "லாக் டவுன் டைரி" படத்தை தமிழில் இயக்கி உள்ளேன். கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில் மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் ஆராய்ச்சி செய்து தொகுத்திருப்பதுடன் இளம் காதல் ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம் உருவாகியிருக்கிறது. இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல குடும்பங்களின் கதையும் உள்ளடக்கியது. என்கிறார் ஜாலி பாஸ்டின்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!