லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன் என பல படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது ஆர்யா நடிப்பில் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. ஆர்யாவுடன் சித்தி இத்னானி, பிரபு, பாக்யராஜ், நரேன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர்யா.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அவரது பிட்னஸ் ரகசியம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆர்யா பதிலளிக்கையில், பிட்னஸ் என்பது ஒழுக்கம், பழக்க வழக்கம் சார்ந்த விஷயம். சில மாதங்கள் ஜாலியாக ஜிம்முக்கு செல்கிறோம் பிட்டாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். சிலர் ஜனவரி 1ம் தேதி இந்த வருஷம் பிட்டாக இருக்கணும் என்று ஜிம்முக்கு செல்வார்கள். ஆனால் தொடர்ந்து ஜிம்முக்கு செல்ல மாட்டார்கள். அதை ஒரு முக்கிய கடமையாக கடைப்பிடித்து வந்தால் மட்டுமே வாழ்க்கை முழுவதும் பிட்டாக இருக்க முடியும். அந்த வகையில் உடம்பை பிட்டாக வைத்திருப்பவர்கள் ஜிம்முக்கு சென்று கடினமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். அது ஒன்றும் விளையாட்டு காரியம் அல்ல. மிகச் சின்சியராக செயல்பட்டால் மட்டுமே நாம் எதிர்பார்த்தபடி பிட்டாக முடியும். இதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்றார்.