இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ஹிப் ஹாப் ஆதி, வினய் ராய், முனீஸ் காந்த், காளி வெங்கட் உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வீரன். இந்தப் படத்தை மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி உள்ளார். வருகிற ஜூன் இரண்டாம் தேதி திரைக்கு வரும் இந்த வீரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், லேசர் பவர் டெக்னாலஜி தொழில்நுட்பத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தான் நிறுவ வேண்டும். ஆனால் அந்த கேபிள் ஒரு கிராமத்தின் வழியாக செல்கிறது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள வீரன் கோவிலையே இடிப்பதற்கு தயாராகிறார்கள்.
இதையடுத்து அதை எதிர்த்து ஹிப் ஹாப் ஆதி எப்படி போராடுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மரகத நாணயம் படத்தை போலவே இந்த வீரன் படமும் ஒரு மாறுபட்ட ஒரு திரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.