காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. துள்ளல் பாடல்களுக்கும், அம்மன் பக்தி பாடல்களுக்கும் புகழ்பெற்றவர். அவருக்கு 'ரெயின் டிராப்ஸ்' என்ற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார்.
ஆண்டுதோறும் சிறந்த பெண்களை தேர்வு செய்து விருது வழங்கி வரும் இந்த அமைப்பு இந்த ஆண்டுக்கான விழாவை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடத்தியது. இதில் சிறந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையார் விருது வழங்கப்பட்டது. இதனை இசை அமைப்பாளர் தேவா வழங்கினார். அத்துடன் சிறந்த நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கு வழங்கப்பட்டது.