22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் அர்ஜூன் ஒரு இயக்குனரும்கூட. ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை, பரசுராம், மதராஸி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். கடைசியா மகள் ஐஸ்வர்யா நடித்த 'சொல்லிவிடவா' படத்தை இயக்கினார்.
தற்போது தனது சகோதரி மகன் துருவா சார்ஜா நடிக்கும் 'மார்ட்டின்' படத்தின் கதையை அர்ஜூன் எழுதியுள்ளார். கன்னடத்தில் தயாராகும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகிறது. வாசி என்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா தயாரிக்கிறார். ஏ.பி.அர்ஜூன் இயக்குகிறார். வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிசர்மா இசை அமைக்கிறார், சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விழா பெங்களூரு ஓரியன்ட் மாலில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தயாரிப்பாளர் உதய் கே.மேத்தா, அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் துருவா சார்ஜா பேசும்போது “திரையுலகில் எனது அங்கிள் அர்ஜூன்தான் எனக்கு வழிகாட்டி. நான் கேட்டுக் கொண்டதற்காக இந்த கதையை எழுதி தந்தார். கதை எழுதி தந்ததோடு படத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்கிற ஆலோசனையும் சொன்னார். எனது கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் பான் இந்தியா படம் இது” என்றார்.