''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். டப்பிங் கலைஞரான இவர் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, வில்லன் என்று பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் என்ற பெயர் எம்.எஸ்.பாஸ்கருக்கு உண்டு. இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், தற்போது 'அக்கரன்' என்ற படத்தில் முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் கபாலி விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடிக்கின்றனர். குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரிக்கிறார். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்கிறார். அருண் கே.பிரசாத் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குன் அருண் பிரசாத் கூறியதாவது: நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிரியதர்ஷினியை, அரசியல் செல்வாக்கு மிகுந்த நமோ நாராயணனின் ஆட்கள் கடத்திச் சென்று கொன்றுவிடுகின்றனர். அந்த பழியை எம்.எஸ்.பாஸ்கர் மீதே சுமத்துகிறார்கள். அவர்களை எம்.எஸ்.பாஸ்கர் எப்படி தந்திரமாகப் பழிவாங்கி, இறுதியில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது கதை. மதுரை பின்னணியில் கதை நடக்கிறது. வரும் மார்ச் மாதம் ஓடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அக்கரன் என்றால், யாராலும் அழிக்க முடியாதவன் என்று பொருள். என்றார்.