‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மிகப்பெரிய நடிகர்களின் நடிப்பில் பல வருடத்திற்கு முன்பு வெளியான படங்கள் ரீ ரிலீஸ் என்கிற பெயரில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் சில மாற்றங்களுடன் டிஜிட்டலில் புதிய வெர்சன் ஆக வெளியானது. அதேபோல எம்ஜிஆர் நடித்த சிரித்து வாழவேண்டும் திரைப்படம் வரும் ஜனவரி 17ல் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதேசமயம் இந்த வருடம் தெலுங்கில் சங்கராந்தி பண்டிகை போட்டியில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்கிற சீனியர்கள் மட்டுமே மோதுகிறார்கள். இளம் நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த சங்கராந்தி பண்டிகையில் ரிலீசாகவில்லை. அதனை ஈடுசெய்யும் விதத்தில் மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பவன் கல்யாண் நடித்த குஷி திரைப்படமும் மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட்டான ஒக்கடு திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன.
இதில் ஒக்கடு திரைப்படம் ஜனவரி 7ம் தேதியும் குஷி திரைப்படம் டிச-31 அன்றும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலுமே கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூமிகா சாவ்லா தான். அந்த வகையில், வரும் புது வருடம் பூமிகாவுக்கு உற்சாகமாக துவங்க இருக்கிறது என்று சொல்லலாம்.