63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி |
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் கோப்ரா. விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி இப்படம் திரைக்கு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. 100 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் 40 கோடி மட்டுமே வசூலித்தது.
இந்தநிலையில் தற்போது கோப்ரா படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. காரணம் டிசம்பர் 15-ந்தேதி ரஷ்யாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. ஆனால் அதையடுத்து ரஷ்ய தியேட்டர்களில் கோப்ரா படம் வெளியாகுமா? என்பது தெரியவில்லை.